Monday, August 27, 2007

ஸ்ரீ லங்கா விமான சேவை தந்த கொடூர அனுபவம்

ஸ்ரீலங்கா விமான சேவை உத்தியோகத்தர்களால் விமானப்பறப்பின்போதும், ஸ்ரீலங்கா(கொழும்பு) சர்வதேச விமானநிலையத்திலும் நான் மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதை எண்ணிப்பார்க்கும்போது அது ஒரு கெட்ட கனவாகவும் கொடூரமான நாளாகவும் அமைந்துவிட்டது.

எனது மருத்துவச் சிகிச்சைக்கான இந்தியப்பயணம் ஹீத்ரோவிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் இல: ருடு 0506 இல் 23.06.07 அன்று ஏற்கனவே திட்டமிடப்பட்டடிருந்தது.

மிகுதி இங்கே



MY ORDEAL WITH SRI LANKAN AIR LINE

K.Kunabalasingam


It was a nightmare and an unforgettable day at the International Airport in Sri Lanka (Colombo) the day was so cruel and when I recollected the inhuman treatment that I received from the staff of the Air Lanka on board as well at the counter in the airport premises.

My journey towards India for a pre planned medical treatment commenced from Heathrow by Sri Lankan Flight No UL 0506 on 23/6/07. This cruel journey resulted in about 11 hours delay in reaching the destination. I was of near reaching the coma condition being a diabetic insulin dependant and had no meals for more 15 hours other than a bottle of water. I did make final complaints of my state of health while standing in front of the counter and stated my body was sweating but no response other than saying that there is no mention of your sickness in the ticket.



Rest go to tamilwebradio

Wednesday, August 22, 2007

உதவி உதவி

எப்படி புதிய புளோக்கரில் தமிழ்மணம் கருவிப்பட்டையை நிறுவுவது? யாராவது உதவுவீர்களா.

Sunday, August 19, 2007

பழைய பதிவுகள்

பழைய தொலைந்த ஒரு சில பதிவுகளை மீட்க உதவியது இந்த தளம்.

எழுதும் ஆர்வம் அதிகம் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போது ஏதாவது எழுதுவேன்.

வெட்டினோம் சூடடிக்கமுதல் வெளிக்கிட்டோம்......

November 13, 2005
வெட்டினோம் சூடடிக்கமுதல் வெளிக்கிட்டோம்......
வைகாசி மாத்தத்தின் வைகறைப் பொழுததனில்
தையல் முத்தாச்சியின் வாக்குப் பொய்த்துப் போனது.
தென்மரின் ஆட்சி என்றும்வடக்கு போகாது
வருகின்ற வடக்கரை வராதே என்னாது
புண்ணிய பூமியடி அமுத சுரபியடி

மாவும், பிலாவும், பனங்கிழங்கும் ஒடியலும்
தனியப் போதுமடி சீவியம் போகுமடி
பேரப்பிள்ளைகளுக்கு அடித்த பெருமை
'மிக்' கோடும் மல்டியோடும் 'மிக்ஸ்' ஆகிப்போனது.

போட்டது போட்டபடி
தொட்டது விட்டபடி
வெளிக்கிடடி பிள்ளை உயிரிருந்தால்
நாளை உதெல்லாம் வேண்டலாம்
கைகாலில்லட்டி எந்தச்சந்தையில் உன்னைக்
கைபிடிச்சுகுடுப்பன்.

வீடும் வேண்டாம் மாடும் வேண்டாம்
கட்டிலோடு அப்புவை தூக்கி- 'மிசின்'
பெட்டீக்கைவையப்பா
தாட்டதை கிண்டேலாது கண்டியோ,
தட்டுமுட்டு இரண்டுபோதும் கஞ்சிவைக்க
உடுபுடவை ஒண்டெண்டாலும் வேணும்
உறுதிகட்டையும் உரப்பைக்குள் போடு.

பொம்மியும் ஜிம்மியும் என்ன செய்ய
கிழவனுக்கு காவலிருக்கட்டன்
அவிழ்த்து விடு- தாகத்துக்கு பானையில் தண்ணி
பசிச்சா பையில விசுக்கோத்து
கிழவனுக்கு கட்டிலுக்கு- பக்கத்தில

பிள்ளைத்தாச்சிய முன்பக்கம் ஏத்து
பிள்ளையளும் நானும் பின்னால நடக்கிறம்
"பைற்றர்' வந்தால் ஏதும் பத்தையள் பாருங்கோ
அம்மாவையும் 'வீல் சியரையும்' வண்டிலில் ஏத்து
அவாவின் மலச்சட்டி, மருந்தை நான் கொண்டுவாறன்.

பாவி நான் பாருங்கோ
பதட்டத்தில்
படலையைப்பூட்டயில்லை
பதகளிப்பில் பத்துப்பவுண் பதக்கத்தை
பஞ்சுமெத்தைகுள்ள வச்சிட்டன்
பரித்தவித்தாள் பரிமளாக்கா

தொட்டது பாது விட்டது பாதி
தின்றது பாதி மென்றது பாதி
ஓலங்கள் பாதி அவலங்கள் மீதி
முற்றான கலியாணம் முறிந்து போனது
மாப்பிள்ளைக்கு வலக்காலில்லையாம்
சத்தான தோட்டம் துரவு
ரத்தத்தில் சகதியாச்சு
ரத்தம் (Blood meal)கூட நல்ல பசளையாமே

முற்றத்து வேப்பமரம் முறிந்து போனது
முத்தான வியர்வை சேர்த்து
முழுமதியாய் மிளிர்ந்து வந்த
முத்தையரின் மூன்றுமாடி முழங்காலில்லாமல்
முத்ததில் கிடந்தது

கோழிமுட்டைகள் சிதறிபோக
'மிக்' போட்ட முட்டைக்குள் கோழிகள் சிதறிப்போயின.
படமெடுக்கும் குகனண்ணையும் , பக்கத்துவீட்டு ஈஸ்வரனும்
சிவன்கோயில் இடிபாட்டுக்கையாம்- சிவலிங்கத்துக்கு சேதமில்லை.

சாவை நகர் பட்டதுன்பம் கேளீர்-கேட்கவும் பார்க்கவும்
இராவணன் போல் உருவேணும்-இராவணரால்
சாவை நகர் சொபை போச்சு- சோடைபோச்சு
கட்டினோம் பார்க்கமுதல் பெயர்ந்திட்டோம்
கொத்தினோம் போடமுதல் போய்விட்டோம்
நட்டுவைத்தோம் பிடுங்கமுதல் பித்தர்களானோம்
வெட்டினோம் சூடடிக்கமுன் வெளிக்கிட்டோம்
இனிமீள்வ தெப்போ- எம்மண்ணைக்காணப்
போவதெப்போ-யாரறிவார்?

நன்றி
D. மீரா
பசுந்தோகை 2000-2001

கொலம்பஸ் அமெரிக்காவை முதலில் கண்டார??

January 13, 2006
கொலம்பஸ் அமெரிக்காவை முதலில் கண்டார??
அமெரிக்காவை முதலில கண்டடைந்தவர் கிரிஸ்தோபர் கொலம்பஸ் என்பது நாம் படித்த வரலாறு. ஆனால் அண்மையில் கிடைத்த 1418 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட உலகவரைபடத்தை ஆதாரமாக கொண்டு அமெரிக்காவை சீன அட்மிரல் சென்கி கண்டுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.இது கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்ததாக சொல்லப்படுவதற்கு 70 ஆண்டுகள் முன்னதாகும்.
இச் சீன அட்மிரல் நன்நம்பிக்கை முனையையும் முதலில் அடைந்தார் என சொல்லபடுகிறது. இப்படத்தில் அமெரிக்க பழங்குடி மக்களை குறிக்கும் வாசகங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சங்காய் நகரில் பழைய தட்டுமுட்டு பொருட்கள் விற்கும் கடையில் இவ்வோவியம் கண்டெடுக்கப்பட்டது. இதில் உள்ள மையின் வயதை கண்டறியும் வரை இத்தகவலின் உண்மைதன்மை பற்றி கூறமுடியாது என சொல்லப்படுகிறது. ஆயினும் இவ்வரைபடம் வரும் வாரம் லண்டனில் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது


ஆதாரம் பிபிசி தமிழோசை ஒலிவடிவம் 13/01/06

காதல் கடிதம் - ஒரு முன்னோட்டம்

January 29, 2006

காதல் கடிதம் - ஒரு முன்னோட்டம்
எங்கள் திரைப்படத்துறையை எப்படி கட்டியெழுப்புவது? எங்களுக்கென ஓர் திரைக்களத்தை எங்கு நிறுவுவது போன்ற கேள்விகளோடு நம்முள் வாழ்கின்ற பல ஈழத்துக் கலைஞர்களின் கலைப்படைப்புக்கள் ஆங்காங்கே குறும்படங்களாகவும், முழுநீளத் திரைப்படங்களாகவும் வெளிவந்த வண்ணமுள்ளன. இருப்பினும் எத்தனையோ நல்ல கலைஞர்கள் இந்த முயற்சியில் இறங்கி முயன்று பார்த்து மூச்சறுந்த நிலையில், போதிய ஒத்துழைப்புகள் இல்லாமல் கலைத்துறையில் இருந்து விலகிச் செல்லும் சூழலே புலம்பெயர் நாடுகளிலும் சரி இலங்கையிலும் சரி இருந்து வருகிறது.
'எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் நிற்க அதற்குத் தக" என்ற வாக்கினைப் பின்பற்றாத எந்தப் படைப்பாளியும் எங்கள் வாழ்வைத் தரமான முறையில் பதிவு செய்ய முடியாது.! இந்த உண்மையை உணர்ந்து காதல் கடிதம் திரைப்படக்குழுவினர் செயற்;பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இசை உலக வரலாற்றில் புதிய முயற்சியாக வெளிவந்த காதல் கடிதம் இசைத்தொகுப்பு அமைந்தது. இந்த இசைத் தொகுப்பு தமிழ் மக்கள் மத்தியிலும், பத்திரிகைகள் மற்றும் தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இப்பொழுது உலகத் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஓர் இசைத்தொகுப்பில் இருந்து ஒர் திரைப்படமென காதல் கடிதம் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காதல் கடிதம் இசைத்தொகுப்பை வழங்கிய அதே கூட்டணியின் அடுத்த இசைத்தொகுப்பும் வெளிவர இருக்கின்ற வேளையில் காதல் கடிதம் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எங்கள் வாழ்வை நாமே பதிவு செய்வோம். அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம். இலங்கை, இந்தியாவில் வாழ்கின்ற எமது கலைஞர்களோடும், தமிழ்நாட்டில் உள்ள திரைப்படத்துறை சார்ந்த தேர்ந்த கலைஞர்களின் ஆதரவோடும், இத்திரைப்படத்தை உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.
இத் திரைப்படத்தின் தயாரிப்பிற்காக கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நானும் வசீகரனும் காத்திருந்தோம். இப்பொழுது ஒரு நல்ல இளம் தயாரிப்பாளர் கிடைத்த மகிழ்ச்சியில், அவரே முழுத் தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்க தொடங்கிவிட்டோம் என்கிறார் படப்பிடிப்புத் தளத்தில் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அவர்கள்.
கடந்த 14.12.2005 அன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, 21.12.2005 முதல் இலங்கையில் படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இத் திரைப்படத்தை Water Falls Movie Makers நிறுவனர் T.தில்லைவண்ணன் அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இலங்கைத் தமிழ்த் திரைப்படக் கூட்டுத்தாபனமும் இவருக்கு தங்களால் ஆன முழு உதவிகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் காதல் கடிதம் படப்பிடிப்பின் முக்கிய விடயமாக உலகத் தமிழர்களின் காதுகளைக் கொள்ளையடித்த 'யாழ்தேவியில் காதல் செய்தால்" பாடல் யாழ். தேவி தொடரூந்திலேயே மூன்று நாட்களுக்கு மேலாகப் படப்பிடிப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பின் போது நு}ற்றுக்கும் அதிகாமான எமது மக்கள் சக்தி குஆ வானொலியூடாகத் தெரிவு செய்யப்பட்டு, யாழ். தேவி தொடரூந்தில் பயணிப்பது போன்று படமாக்கப்பட்டது.
இந்தப் பாடலை உயிரோட்டமாகப் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்ட சாம்.பி.கீர்த்தன் அவர்களே பாடி நடித்தது இந்தப் படத்திற்கு மேலும் சிறப்பூட்டுகிறது.
இந்தப் பாடலுக்கான முழுமையான அனுசரனையை வழங்கி, திறந்த மனதோடு காதல் கடிதம் திரைப்படக் குழுவினருக்கு தங்கள் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் சக்தி குஆ வானொலி மற்றும் சக்தி தொலைகாட்சியினர்.
இத்திரைப்படத்தில் இடம் பெற இருக்கும் ஆறு பாடல்களில் 'ஈழப்பெண்ணே ஈழப்பெண்ணே", 'ஒரு நதியின் பெயரோடு பிறந்தவளே", 'எழுது எழுது என் அன்பே", 'யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை", ஆகிய பாடல்கள் இலங்கை முழுவதும் உள்ள எழில் கொஞ்சும் இயற்கைத் தாயின் மடியில் படம்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதுவரையில் எந்தத் தமிழ்த் திரைப்படங்களிலும் இடம்பெறாத அழகு தளங்களில் காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், படம்பிடிக்கப்பட்டு, வவுனியாவில் இத்தரைப்படத்தின் திருப்புமுனைக் காட்சி படம்பிடிக்கப்பட்ட போது வவுனியாவில் வாழ்கின்ற தமிழ்; மக்கள் மனமுருகி அக்காட்சியோடு ஒன்றிப்போய் கண்ணீர் சிந்தும் வகையில் இக்காட்சி படமாக்கப் பட்டது மறக்கமுடியாது என்கிறார் காதல் கடிதம் திரைப்படக் குழுவில் பணியாற்றும் ஒருவர்.
உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழரின் வாழ்வியலை அவர்களின் வளமான குடும்ப வாழ்க்கையை, ஒரு பிள்ளைக்கு காதல் வந்தால் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை, எங்கள் கலை கலாச்சார பண்பாட்டுத் தன்மைகள் சிதையாத வகையில் அழகிய திரைக்காவியமாக வெளிக் கொண்டுவரும் கடிதம்தான் காதல் கடிதம்.
காதல் கடிதம் திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறிபாலாஐp கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு இணையாக உங்கள் இதயத்தை வருடும் கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிசா ஈழத்துப் பெண்ணாக அறிமுகமாகிறார். அறிமுக நடிகர்களாக இருந்தாலும் கதையின் தரம் கருதி இருவரும் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்துக் கொண்டிருக்கிறர்கள்.
இத்திரைப்படத்தை குறுகிய காலத்திற்குள் உருவாக்கியே தீருவேன் என உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் முன்வந்த இளைய தயாரிப்பாளர் வு.தில்லைவண்ணன் இப்படத்தின் இயக்குனர் திரு.முகேஷ் அவர்களுக்கும், காதல் கடிதம் திரைப்படக் குழுவினருக்கும் திருப்தி தரும் வகையில் தயாரிப்புச் பணிகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
பாரதி கண்ணம்மா முதல் ஆட்டோக்கிராப் திரைப்படம் வரை 'தவமாய்த் தவமிருந்து" திரையில் ஓர் நாவல் தந்த இயக்குனர் சேரனிடன் உதவி இயக்குனராகப் பணியாhற்றிய திரு.முகேஷ் அவர்கள் திருமதி.வினோலியா நீதிதேவன் அவர்களின் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி மிகவும், அழகாக நெறியாள்கை செய்து கொண்டிருக்கிறார்.
காதல் கடிதம் இசைத்தொகுப்பின் மூலம் தனது உன்னதமான இசையை பாடல்களுக்கு வழங்கி, பின்னணி இசையினை வழங்கவும், காதல் கடிதம் திரைப்படக் குழுவினருக்கு மிகவும் பக்கபலமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அவர்கள்.
திரைப்படக் கல்லுரியில் படித்துப் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து, தங்கப் பதக்கம் வென்று தன் புதுமையான ஒளிப்பதிவில் கண்ணுக்குக் குளிர்மையான காட்சிகளை கவிதையாக தந்து கொண்டிருக்கிறார் டீ.சு.ராஐன் அவர்கள்.
இத்திரைப்படத்தின் முழுப் பாடல்களையும் முதல் முறையாக புலம்பெயர்ந்து நோர்வே மண்ணில் வாழ்கின்ற வசீகரன் அவர்கள் எழுதியிருக்கின்றார்.
இப்படி எல்லாமே புதிய, இளைய முகங்களின் அறிமுகங்களோடு உங்களுக்கு ஏற்கனவே பரிட்சயமான பிரபல தென்னிந்திய நடிகர்களும் காதல் கடிதம் திரைப்படத்தில் இணைகின்றார்கள்.
நடிப்பில் கலக்கப் போகும், உங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான நடிகர்கள். நிழல்கள் ரவி, சிறிரஞ்சனி, காதல் திரைப்படப் புகழ் சுகுமார், ராசி அழகப்பன், விஐய் கணேஸ், பிரவீன், இவர்களோடு இலங்கைக் கலைஞர்களில் பொப்பிசைப் பாடகர் யு.நு.மனோகரன். எங்கள் மூத்த கலைஞர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிப்பாளர் திரு.நடராஐசிவம் அவர்கள் கதாநாயகியின் தந்தையாக வாழ, கதாநாயகியின் தாயாக தோன்றுகிறார் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான குணச்சித்திர நடிகை ஒருவர்.
தொழிநுட்பக் கலைஞர்கள்:
தயாரிப்பு: வு.தில்லைவண்ணன் றுயவநச குயடடள ஆழஎநை ஆயமநசள.
மூலக்கதை: வினோலியா
திரைக்கதை, வசனம், இயக்கம்: முகேஷ்
ஒளிப்பதிவு: டீ.சு.ராஐன்
இசை: வி.எஸ்.உதயா
பாடல்கள்: வசீகரன் (நோர்வே)
கலை: கலைராஐ;
நடனம்: காதல் படப் புகழ் கந்தாஸ், மன்மதராசா பாடல் புகழ் சிவசங்கர்
படத்தொகுப்பு: வாசு சலிம்
நிழற்ப்படம்: சிற்றரசு
திரைப்படத்தில் பணியாற்றத் துடித்துக் கொண்டிருக்கும் இலங்கைக் கலைஞர்கள், தொழிநுட்பக்
கலைஞர்கள், மற்றும் அறிமுக நடிகர்கள் பலர் இந்தக் 'காதல் கடிதம்" திரைப்படத்தினூடக ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.
ஒரு தொலைபேசி உரையாடல் வாயிலாக உருவான நட்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஓர் இசைத்தொகுப்பு திரைப்படமாவதை எண்ணி எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் இத்திரைப் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
உங்கள் வாழ்வை திரையில் பார்த்து மகிழ மாசி மாதம் வரை காத்திருங்கள்.
காதுகளுக்கு விருந்து படைத்தோம் உங்கள் கண்களுக்கும் விருந்து படைக்க மிக விரைவில் வருவோம்! என்கிறார்கள் காதல் கடிதம் திரைப்படக் குழுவினர்.
இத்திரைப்படம் தொடர்பான மேலதிக தகவல்கள், படப்பிடிப்பு தளங்களில் இருந்து கிடைக்கப்பெறுகின்ற நிழல் படங்களைப் பார்வையிட www.vnmusicdreams.comபாருங்கள்.
நன்றி தமிழ்நாதம் இணையம் http://www.tamilnaatham.com/special/kathal_kaditham_20060121/

மீண்டும் வணக்கம்

வலைப்பதிவு நண்பர்களுக்கு

முன்னர் yarl.net சேவை வழங்கியில் ஒரு வலைப்பதிவை வைத்திருந்தேன். சேவை வழங்குனர்கள் தமது சேவையை இடை நிறுத்தி கொண்டதால் தொடர்ந்தும் எனது வலைப்பதிவை பேண முடியவில்லை. அத்துடன் வலைப்பதிவு எழுதுவதில் ஏற்பட்ட சோர்வும் என்னை தொடர்ந்து எழுதவிடாமல் செய்துவிட்டது. இருந்தபோதும் தொடர்ந்து வலைப்பதிவுகளை வாசித்துவருவது வழமை. சில சமையங்களில் பின்னூட்டமும் இடுவதுண்டு. இன்று தமிழ்சசியின் வலைப்பதிவில் எனது பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருந்ததை பார்த்த போது ஆச்சரியமாக இருந்ததது. ஏன் எனில் நான் வலைப்பாதிவில் அதிகம் அறியபடாத/ அல்லது மறக்கப்பட்ட ஒரு வலைப்பதிவர். எனது பெயரிலும் போலி பின்னூட்டமா? தொடர்ந்தும் எனது பெயரில் போலி பின்னூட்டம் வரலாம் வராமலும் இருக்கலாம். போலி பின்னூட்டம் வரும் போது முன்னர் என்னுடன் பரிச்சயமாக இருந்த வலைப்பதிவர்கள் நான் என தப்பாக நினைக்ககூடும் என்பதாலேயே மீளவும் வலைப்பதிவை தொடங்கியுள்ளேன்.

நட்புடன்
குழைக்காட்டான்