நான் கூகுல் கூறோம் உலாவி பாவிப்பது வழக்கம். அண்மைய நாட்களில் பல வ லைபதிவுகள் குறிப்பாக தமிழக அரசியலையும் ஈழ பிரச்சனையையும் சம்பந்த படுத்தி எழுதப்படும், தி மு க, காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்து/ நையாண்டி செய்து எழுதபடும் பதிவுகள், அல்லது தமிழக முதல்வரின் உண்ணாவிரத்தின் நோக்கம் பற்றி விமர்சித்த சில பதிவுகளிற்கு செல்ல முற்பட்ட போது கூகுல் குறோம் குறிப்பிட்ட வலைப்பதிவு Malware ஐ கொண்டிருப்பதாக எச்சரிக்கை செய்து குறிப்பிட்ட வலைப்பதிவிற்கு நுளைய விடாமல் தடுக்கிறது.
உதாரணமாக 3 வலைப்பதிவுகள்
1. லோசன்

2. ஜோதிபாரதி

3.

இட்டலிவடையை உண்பவர்கள் எனும் தலைப்பை கொண்ட வலைப்பதிவிலும் இதே பிரச்சனை இருந்தது. மேலும் சில வலைப்பதிவுகளிலும் அவதானித்திருக்கிறேன். அவற்றின் பெயர் நினைவில் இல்லை.
உண்மையில் அவர்கள் எழுதும் விடயங்கள் காரணமாக வலைப்பதிவில் இடையூறு செய்ய யாரும் செய்யும் வேலையா?
அல்லது
குறிப்ப்பிட்ட வலைப்பதிவுகளில் இணைத்துள்ள விளம்பரங்களின் கரணமா??
தெரிந்தவர்கள் விடைசொல்லுங்கள்.
0 comments:
Post a Comment